ரியோ டி ஜெனிரோ, 19 பிப்ரவரி (பெர்னாமா) - பிரேசிலில் வெப்ப அலையின் தாக்கம் அதிகரித்து வருகின்றது.
ரோச்சினா எனப்படும் மிகப்பெரிய குடிசைப் பகுதி வாழ் மக்கள் இந்த வெப்ப அலையால், நீர் பற்றாகுறையால் பொது சதுக்கத்தில் உள்ள மழை நீரைப் பயன்படுத்துகின்றனர்.
ரியோ டி ஜெனிரோவின் தெற்கு மண்டலத்தில் குறிப்பாக நீர் அழுத்தம் போதுமானதாக இல்லாத உயர்ந்த பகுதியில் உள்ள ரோச்சினா தொடர்ந்து நீர் விநியோகச் சிக்கல்களை எதிர்கொள்கிறது.
நீர் பற்றாக்குறையும் வெப்பநிலையும் குடியிருப்பாளர்களுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.
வெப்பத்தைத் தணிப்பதற்கு போதுமான வழிகள் இல்லாமல், சுகாதார ரீதியில் ஆபத்துக்களும் அதிகரித்து வருகின்றன.
ரியோ டி ஜெனிரோ குறைந்தது பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மிகவும் வெப்பமான நாளைப் பதிவு செய்துள்ளது.
இனிவரும் நாள்களில் கடுமையான வெப்பம் ஏற்படும் என்று நகர அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)