டோஹா, 19 பிப்ரவரி (பெர்னாமா) -- கட்டார் பொது டென்னிஸ் போட்டியின் மூன்றாவது சுற்றில் செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி கண்டுள்ளார்.
இத்தாலியின் மேத்தியோ பெரெட்டினி அவரை 7-6, 6-2 என்று நேரடி நெட்களில் வீழ்த்தி நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.
பட்டத்தை தட்டிச் செல்ல வேண்டும் என்ற ஜோகோவிச்சின் கனவு தோல்வியிலும் ஏமாற்றத்திலும் முடிந்தது.
கடந்த மாதம் ஆஸ்திரேலிய பொது டென்னிஸ் போட்டியிலிருந்து காயம் காரணமாக வெளியேறியதை அடுத்து, குணமாகி அவர் பங்கேற்ற முதல் போட்டி இதுவாகும்.
அவரை ஒரு மணி நேரம் 35 நிமிடங்களில் ஆட்டமிழக்கச் செய்தார் மேத்தியோ பெரெட்டினி.
ஜோகோவிச்சுக்கு எதிரான முதல் வெற்றியைப் பெற்றுள்ள பெரெட்டினி அடுத்த ஆட்டத்தில் டோலன் கிரீக்ஸ்பூர் உடன் களம் காண்கிறார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)