மே சொட், 20 பிப்ரவரி (பெர்னாமா) -- மியன்மாரில் தொலைபேசி அழைப்பு மையத்தில் இணைய மோசடிகளை மேற்கொள்ள கட்டாயப்படுத்தப்பட்ட சீன நாட்டு பிரஜைகள் இன்று தாய்லாந்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
மனித கடத்தல் வழி மியன்மாரில் மோசடி நடவடிக்கையில் ஈடுப்பட்ட வந்த அவர்கள் அனைவரையும் அந்நாட்டு போலீஸ் அண்மையில் காப்பாற்றியது.
மியன்மாரின் சில பகுதிகளில் செயல்பட்டு வந்த தொலைபேசி அழைப்பு மையத்தில் சில நாடுகளைச் சேர்ந்தவர்கள் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டனர்.
அண்மையில் மியன்மார் போலீஸ் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் அவர்கள் மீட்கப்பட்டனர்.
தற்போது தாய்லாந்திற்கு செல்ல சுமார் 7,000 பேர் மியன்மார் எல்லையில் காத்திருக்கின்றனர்.
அதில் ஒரு பகுதியாக சீன நாட்டு பிரஜைகள் தாய்லாந்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
வியாழக்கிழமை தொடங்கி, மூன்று விமானங்களில் சுமார் 600 பேர் சீனாவுக்கு பயணமாகவுள்ளதாக தாய்லாந்து தற்காப்பு அமைச்சு கூறியது.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]