மரனெல்லோ, 21 பிப்ரவரி (பெர்னாமா) -- ஃபெராரி நிறுவனம் தனது புதிய ஃபார்முலா 1 காரை செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.
அண்மைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, SF-25 எனும் அக்கார் வடிவமைக்கப்பட்டிருப்பதாக ஃபெராரி நிறுவனம் கூறியது.
கடந்த ஆண்டு பயன்படுத்தப்பட்ட இயந்திரத்தை அடிப்படையாக கொண்டு இப்புதிய கார் தயாரிக்கப்பட்டிருந்தாலும், இதுவரை வெளியிடப்பட்ட 25 கார்களை விட இக்கார் மாறுபட்டிருப்பதாக ஃபெராரிI நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏழு முறை உலக வெற்றியாளரை பட்டத்தை வென்றுள்ள லெவிஸ் ஹமில்டன், மெர்சிடெஸ் நிறுவத்திலிருந்து விலகி இப்பருவத்தில் ஃபெராரி நிறுவனத்தில் இணைந்துள்ளார்.
சார்ல்ஸ் லெஹர் -உடன் ஹமில்டன் ஜோடி சேரவுள்ளதால், ஃபார்முலா1 கார் பந்தயத்தில் புதிய அடைவுநிலைகள் பதிவு செய்யப்படும் என்று ஃபெராரி நிறுவனம் நம்பிக்கை கொண்டுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)