ரோம், 24 பிப்ரவரி (பெர்னாமா) - நியூயார்க்கில் இருந்து இந்தியா புது டெல்லிக்கு பயணமான American Airlines விமானம் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ரோமில் பாதுகாப்பாக தரையிறங்கியது,
அவ்விமானம் இத்தாலிக்கு திருப்பி விடப்பட்ட பின்னர் அந்த அச்சுறுத்தல் நம்பகமற்றது என்று நிரூபிக்கப்பட்டதாக சம்பந்தப்பட்ட விமான நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
Leonardo da Vinci அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்கியப் பிறகு 292 விமானத்தை சட்ட அமலாக்க அதிகாரிகள் பரிசோதித்து, மீண்டும் புறப்பட அனுமதி வழங்கியதாக American Airlines தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கான காரணத்தை அந்நிறுவனம் தெளிவுபடுத்தவில்லை.
எனினும், சம்பந்தப்பட்ட விமானம் புது டெல்லியில் தரையிறங்குவதற்கு முன்பு நெறிமுறைப்படி ஒரு பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தை American Airlines சுட்டிக்காட்டியது.
அவ்விமானம் நேற்று முன்தினம் இரவு 8.14 மணிக்கு நியூயார்க்கில் இருந்து டெல்லி நோக்கி புறப்பட்டது.
அவ்விமானத்தில் சுமார் 285 பயணிகள் பயணம் செய்தனர்.
டெல்லிக்குச் செல்வதற்கு முன்னர், பணியாளர்கள் ஓய்வெடுப்பதற்கு அனுமதிக்க அந்த விமானம் இரவு முழுவதும் ரோமில் நிறுத்தப்படும் என்றும் அந்நிறுவனம் முன்னதாக தெரிவித்திருந்தது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)