பொது

ஆசியான்: இன்று தொடங்கியது பொருளாதார மூத்த அதிகாரிகள் ஆயத்தக் கூட்டம் 

26/02/2025 04:13 PM

டேசாரு, 26 பிப்ரவரி (பெர்னாமா) - 31ஆவது AEM எனப்படும் ஆசியான் பொருளாதார அமைச்சர்கள் கூட்டத்திற்கான முன்னேற்பாடாக பொருளாதார மூத்த அதிகாரிகள் ஆயத்தக் கூட்டம், SEOM இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி, நாளை வரை நடைபெறவுள்ளது.  

ஆசியான் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த பொருளாதார மூத்த அதிகாரிகளை உட்படுத்திய இக்கூட்டத்திற்கு முதலீடு, வாணிபம் மற்றும் தொழில்துறை அமைச்சின் துணைத் தலைமைச் செயலாளர் மஸ்தூர அஹ்மாட் முஸ்தாஃபா தலைமையேற்கிறார். 

"விளக்கக்காட்சி மற்றும் கலந்துரையாடலை நெறிப்படுத்த SEOM சக ஊழியர்களுடன் கலந்துரையாடல்களை எளிதாக்க நான் எதிர்பார்க்கிறேன். இதன்வழி, பொருத்தமான அம்சங்களில் நாம் கவனம் செலுத்த முடியும் என்பதை உறுதிசெய்ய முடியும். ஏ.இ.எம்-இன் வழிகாட்டுதல் மற்றும் முடிவுகளைப் பெறவும் முடியும்,'' என்றார் அவர்.

வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவிருக்கும் 31ஆவது AEM கூட்டத்தில் முன்வைக்கப்படுவதற்கு முன்னதாக இந்த SEOM கூட்டத்தில் பரிந்துரைகளையும் வியூகத் திட்டங்களையும் அம்மூத்த அதிகாரிகள் கலந்துரையாடுவர். 

பிப்ரவரி 22 தொடங்கி 28-ஆம் தேதி வரை, ஜோகூர், டெசாருவில் AEM மற்றும் அது தொடர்பிலான கூட்டங்கள் நடைபெறுகின்றன. 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)