புசான், 04 மார்ச் (பெர்னாமா) -- அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பின் நிர்வாகம் பல நாடுகளுக்கு இடையே சிக்கல்களை ஏற்படுத்துவதாக, வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன்னின் சகோதரியான கிம் யோ ஜோங் விமர்சித்துள்ளார்.
இதனால், தமது நாட்டில் அணு ஆயுத தாக்குதலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.
மார்ச் 2-ஆம் தேதி அமெரிக்காவின் விமானம் தாங்கி கப்பலான USS, தென் கொரியாவில் நங்கூரமிட்டது.
இந்த நடவடிக்கை வட கொரியாவுக்கும் தென் கொரியாவுக்கும் உள்ள நெருக்கடியை அதிகரிப்பதாக கிம் யோ ஜோங் குறிப்பிட்டார்.
இந்த ஆண்டு தொடங்கி அமெரிக்காவின் புதிய நிர்வாகம் வட கொரியாவுக்கு எதிரான அரசியல் மற்றும் இராணுவ நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.
வட கொரியாவிற்கு எதிரான பலத்தை நிரூபிக்கும் விதமாக, அமெரிக்க விமானம் தாங்கி கப்பல் தெற்கு துறைமுக நகரமான புசானை வந்தடைந்ததாக தென் கொரிய கடற்படை தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் டோனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றப் பிறகு, தென் கொரிய துறைமுகத்தில் நிறுத்தப்பட்ட முதல் அமெரிக்க விமானம் தாங்கி கப்பல் இதுவாகும்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)