லிமா, 04மார்ச் (பெர்னாமா) - இவ்வார இறுதியில் வடக்கு பெருவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தினால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர் மழை பெய்வதால் அங்கே சிவப்பு எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு கருதி ஆயிரக்காணக்கான மக்கள் தங்கள் குடியிருப்புகளை விட்டு தற்காலிக நிவாரண மையங்களில் தங்கியிருக்கின்றனர்.
தொடர் கனமழை காரணமாக, Tumbes ஆறு இயல்பை விட பெருக்கெடுத்து ஓடுகிறது.
வெள்ளத்தினால் ஒரு லட்சத்து 50,000 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 3,000 வீடுகள் சேதமுற்றன.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அந்நாட்டு அரசாங்கம் நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)