சிரம்பான், 04 மார்ச் (பெர்னாமா) -- நேற்று, நெகிரி செம்பிலான், பண்டார் பாரு நீலாயில் உள்ள பேரங்காடி ஒன்றில் ஆயுதங்களை ஏந்தி, கொள்ளை நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும், மூன்று ஆடவர்களைப் போலீஸ் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சம்பந்தப்பட்ட மூவரில் இருவர் பேரங்காடி வளாகத்திற்குள் நுழைந்ததாகவும், மற்றொருவர் காரில் காத்திருந்ததாகவும், நீலாய் மாவட்ட போலீஸ் தலைவர் அப்துல் மாலிக் ஹஷிம் கூறினார்.
சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில், துப்பாக்கிகளைப் பயன்படுத்தி குழு ஒன்று பேரங்காடியில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வருவதாக, பெண் ஒருவரிடமிருந்து தங்களுக்கு அழைப்பு கிடைத்தாக Supt அப்துல் மாலிக் ஹஷிம் தெரிவித்தார்.
நேற்றிரவு மணி 8.36-க்கு நிகழ்ந்த அச்சம்பவத்தில் சந்தேக நபர்களில் ஒருவர் துப்பாக்கியைப் பயன்படுத்தியிருப்பது, முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனிடையே, காயங்கள் ஏதும் பதிவுச் செய்யப்படாத நிலையில், மொத்த இழப்பீட்டின் மதிப்பு இன்னும் கணக்கிடப்பட்டு வருவதாக, அப்துல் மாலிக் தெரிவித்தார்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள், நீலாய் போலீஸ் தலைமையகத்தின் செயல்பாட்டு அறைக்கு, திரையில் காணும் எண்ணில் தொடர்புக் கொண்டு புகாரளிக்கலாம்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)