பொது

பிற மதத்தை இழிவுப்படுத்திய வானொலி நிலைய ஊழியர் மீது எம்சிஎம்சி நடவடிக்கை

04/03/2025 05:08 PM

கோலாலம்பூர், 04 மார்ச் (பெர்னாமா) --    இன்று காலை, பிற மத சடங்குகளை அவமதித்து, சமூக ஊடகத்தில் காணொளி பதிவேற்றம் செய்த ஆஸ்ட்ரோ நிறுவனத்திற்குச் சொந்தமான வானொலி நிலையத்தின் ஊழியர்கள் மீது விரிவான விசாரணையை மேற்கொள்ள மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம், எம்சிஎம்சி பணிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து எம்சிஎம்சிக்கு முழுமையான விளக்கத்தை அளிக்க, ஆஸ்ட்ரோ மற்றும் வானொலி நிலையத்தின் நிர்வாகம் அழைக்கப்படும் என்று தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் கூறினார்.

வானொலி நிலைய ஊழியர்களின் நடவடிக்கை குறித்து பல்வேறு தரப்பினர்களிடமிருந்து தொடர்பு அமைச்சுக்குப் புகார் கிடைத்ததாக, இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் ஃபஹ்மி ஃபட்சில் கூறினார்.

தைப்பூசத்தை அவமதிக்கும் வகையில் ஆஸ்ட்ரோ நிறுவனத்திற்குச் சொந்தமான வானொலி தொகுப்பாளர்களின் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றது.

எனினும், நாட்டின் மத உணர்வை இழிவுப்படுத்தும் வகையில் காணொளிப் பதிவை வெளியிட்ட மூன்று வானொலி தொகுப்பாளர்களும் மன்னிப்பு கோரியுள்ளனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)