பொது

திறனாற்றலை வலுப்படுத்துவதற்கான திட்டங்கள் வழி உற்பத்தியை அதிகரிக்கலாம் 

04/03/2025 05:24 PM

கோலாலம்பூர், 04 மார்ச் (பெர்னாமா) - தொழில்நுட்பம் மற்றும் தொழில் பயிற்சி TVET-இல் திறனை அதிகரிப்பது, செயற்கை நுண்ணறிவு AI தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெறுவது, திறன் பயிற்சி மையங்களை உருவாக்குவது போன்ற திட்டங்கள் மூலம்  உற்பத்தியை அதிகரிக்க முடியும்

மேலும், உற்பத்தித்திறன் அதிகரிக்கும் அதே வேளையில், தனிநபர் வருமானம் உயர்வு காண்பதையும் அத்திட்டங்கள் உறுதி செய்யும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

''நாட்டில் பல புதிய நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கு வருகின்றன. சிறந்த மையத்தை உருவாக்கத்திற்கு நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம். என்வீடியா, கூகள், மைக்ரோசாப்ட், இன்ஃபினியன் (Nvidia, Google, Microsoft, Infineon) ஆகியவை இதில் அடங்கும். ஏ.ஐ ஒரு சவாலான அணுகுமுறை என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். இதை நாங்கள் ஒரு தெளிவான கொள்கையாக மாற்றியிருந்தாலும், அதனைப் பயன்படுத்துவதில் கட்டுப்பாடுகள் உள்ளன,'' என்றார் அவர்.

இன்று மக்களவை கேள்வி நேர அங்கத்தின் போது, ஊதிய உயர்வு மட்டுமின்றி அதிக வருமானம் பெறும் நாடு என்ற தகுதியை அடைய தொழிலாளர்களின் உற்பத்தி விகிதத்தை உயர்த்தும் அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்து, மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாடிக் சைட் அப்துல் ரஹ்மான் எழுப்பிய கூடுதல் கேள்விக்கு பிரதமர் அவ்வாறு பதிலளித்தார். 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)