பொது

சோதனைக்கால செயல்பாட்டிற்கு டிபிஜி உட்படலாம்

04/03/2025 05:43 PM

கோலாலம்பூர், 04 மார்ச் (பெர்னாமா) - வரும் 15ஆம் தேதி தொடங்கி கோம்பாக் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் TBG சோதனைக்கால செயல்பாட்டை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நோன்புப் பெருநாளுக்கு முன்னதாக TBS ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் ஏற்படும் நெரிசலை இந்த சோதனைக் காலம் குறைக்கக்கூடும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

''எல்லாம் முடிந்து, சோதனை எல்லாம் சரியாகிய பிறகு, இரண்டாவது வாரத்தில் நாங்கள் இங்கிருந்து செயல்முறையைத் தொடங்குவோம். அதாவது பயணிகள் இந்த முனையத்தில் உள்ள பேருந்தில் பயணிக்கலாம். மார்ச் மாத இறுதியில் கொண்டாடப்படும் நோன்புப் பெருநாள் காலகட்டத்தில், சொந்த ஊர்களுக்குத் திரும்ப விரும்புவோர் விரைவுப் பேருந்தில் செல்வதற்கு இந்த முனையத்தை  நுழைவாயிலாகப் பயன்படுத்தலாம்,'' என்றார் அவர்.

இன்று கோலாலம்பூரில் உள்ள கோம்பாக் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தைப் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அந்தோணி லோக் அவ்வாறு கூறினார்.

இதனிடையே, வருங்காலத்தில், கிழக்குக் கடற்கரையை நோக்கி செயல்படும்  பேருந்து சேவைகள், கோம்பாக் LRT, கிழக்குக்கரை ரயில் பாதைத் திட்டம் ECRL ஆகியவற்றை இணைக்கும் முக்கிய போக்குவரத்து தளமாக TBG  விளங்கும்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)