இங்கிலாந்து, 07 மார்ச் (பெர்னாமா) - ஐரோப்பிய கான்ஃபிரன்ஸ் (Konferens) லீக் கிண்ண காற்பந்து போட்டி...
இன்று அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்தின் செல்சி கிளப் 2-1 எனும் கோல் எண்ணிக்கையில் டென்மார்க்கின் கோபன்ஹேகன் அணியை வீழ்த்தியது.
இந்த வெற்றியின் வழி காலிறுதியை நெருங்கி கிண்ணத்தை கைப்பற்றும் இலக்கில் செல்சி குறியாக உள்ளது.
சிறந்த 16 கிளப்கள் மோதும் இந்த நான்காம் சுற்று ஆட்டம் டென்மார்க்கின் Parken காற்பந்து அரங்கில் நடைபெற்றது.
இரு கிளப்களும் முதல் பாதி ஆட்டத்தில் கடும் போட்டியை வழங்கியதால் அதில் கோல் ஏதும் அடிக்கப்பட்டவில்லை.
செல்சியின் முதல் கோல் இரண்டாம் பாதி தொடங்கிய 46-வது நிமிடத்தில் Reece James வழி அடிக்கப்பட்டது.
அதன் இரண்டாம் கோல், 65-வது நிமிடத்தில் போடப்பட்டது.
சொந்த மண்ணில் விளையாடிய கோபன்ஹேகன், கோல் ஏதும் அடிக்காமல் ஆட்டத்தை முடிக்கக் கூடாது என்ற வேட்கையில் தனது ஆட்டத்திறனை அதிகரித்தது.
அதன் பயனாக, அந்த கிளப்பின் ஒரே கோல் 79ஆவது நிமிடத்தில் போடப்பட்டது.
இப்போட்டியின், இரண்டாம் சுற்று ஆட்டம் அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை செல்சியின் Stamford Bridge அரங்கில் நடைபெறும்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)