பாரிஸ், 08 மார்ச் (பெர்னாமா) - ஒர்லென்ஸ் மாஸ்டர்ஸ் பூப்பந்து போட்டி...
இன்று காலை நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் அயர்லாந்தைச் சேர்ந்த NHAT NGUYEN-இடம் தோல்வி கண்டதைத் தொடர்ந்து இப்போட்டியில் இருந்து வெளியேறியுள்ளார் நாட்டின் ஆடவர் ஒற்றையர் விளையாட்டாளர் லீ சீ ஜியா.
பிரான்ஸ், பாரிஸ், Palais des Sports-இல் நடைபெற்ற இப்போட்டியில், Nguyen முப்பத்து ஒன்பதே நிமிடத்தில் ஜி சியாவை 23-21, 21-7 என்ற புள்ளிகளில் தோற்கடித்தார்.
இந்த வெற்றியின் வழி, ஜி சியாவுடனான முந்தைய மூன்று ஆட்டங்களில் வெற்றி பெறாத தனது சாதனையை Nguyen முறியடித்துள்ளார்.
இந்த வெற்றியின் வழி Nguyen, அறையிறுதி ஆட்டத்தில் பிரான்சைச் சேர்ந்த அலெக்ஸ் லெனியரை சந்திக்கவுள்ளார்.
இதனிடையே, தேசிய ஆடவர் இரட்டையரான Arif Junaidi-Yap Roy King ஜோடி தைவானைச் சேர்ந்த Lee Jhe Huei-Yang Poh Hsuan ஜோடியை 21-19, 21-18 என்ற புள்ளிகளில் வீழ்த்தியுள்ளது.
இவர்கள் அறையிறுதி ஆட்டத்தில் முதல் முறையாக Liang Wei Keng-Wang Chang ஜோடியைச் சந்திக்கவுள்ளனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)