அர்ஜென்டினா, 08 மார்ச் (பெர்னாமா) - அர்ஜென்டினாவின் தலைநகர் BUENOS AIRES தென்மேற்கில் உள்ள துறைமுக நகரங்களான BAHIA BLANCA மற்றும் PUNTA ALTA-இல் புயல் மற்றும் கனமழையால் குறைந்தது அறுவர் உயிரிழந்தனர்.
எட்டு மணிநேரம் பெய்த தொடர் கனமழையால் 350,000 மக்கள் வசிக்கும் அந்நகரம் வெள்ளத்தால் சூழ்ந்தது.
மேலும் அப்பகுதியில் உள்ள Jose Penna மருத்துவமனையிலிருந்த நோயாளிகளை அதிகாரிகள் வெளியேற்றினர்.
மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளை மருத்துவ ஊழியர்கள் வெளியேற்றும் மற்றும் மீட்புப் பணியில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்ட காட்சிகளைக் கொண்ட காணொளி பகிரப்பட்டுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)