Ad Banner
Ad Banner
Ad Banner
 உலகம்

போர் நிறுத்தம் குறித்த அமெரிக்காவின் பரிந்துரைக்கு உக்ரேன் இணக்கம்

12/03/2025 04:33 PM

கீவ், 12 மார்ச் (பெர்னாமா) --   ரஷ்யாவுடன் 30 நாள்கள் போர் நிறுத்தம் என்ற அமெரிக்காவின் பரிந்துரைக்கு உக்ரேன் இணக்கம் தெரிவித்துள்ளது.

சவுதி அரேபியாவில் நடந்த இரு தரப்பு அதிகாரிகள் உடனான பேச்சு வார்த்தைக்குப் பின்னர் எடுக்கப்பட்ட முடிவை, உக்ரேனிய பிரதமர் வோலோடிமிர் செலென்ஸ்கி வரவேற்றுள்ளார்.

இரு நாடுகளுக்கு இடையிலான இந்த பேச்சுவார்த்தையில் வோலோடிமிர் செலென்ஸ்கி பங்கேற்கவில்லை.

ஆயினும், போர் நிறுத்தம் தொடர்பில் இது நேர்மறையான முன்னெடுப்பாகும் என்பதை அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.

அமெரிக்காவின் பரிந்துரையை உக்ரேன் ஏற்றுக்கொள்ளத் தயாராக உள்ளதாக கூறியதைத் தொடர்ந்து, அந்நாட்டிற்கு இராணுவ மற்றும் உளவுத்துறை சாரந்த உதவிகளை மீண்டும் தொடங்க அமெரிக்கா நேற்று ஒப்புக்கொண்டது.

போர் நிறுத்த ஒப்பந்தத்தை இரு நாடுகளும் ஒரு கூட்டு அறிக்கையின் வழி தெரிவித்துள்ளன.

அதோடு, உக்ரேனின் முக்கியமான கனிம வளங்களை மேம்படுத்துவதற்கான ஒரு விரிவான ஒப்பந்தமும் விரைவில் இரு தரப்பினரால் மேற்கொள்ளபடவிருக்கின்றது.

இந்த ஒப்பந்தம் பல வாரங்களாக பேச்சு வார்த்தையில் இருந்த வேளையில். அண்மையில் டொனல்ட் டிரம்ப் - செலென்ஸ்கி ஆகிய இருவருக்கும் இடையிலான சந்திப்பு தோல்வியில் முடிந்ததால், பின்னர் ரத்து செய்யப்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)