சிப்பாங், 01 ஜூலை (பெர்னாமா) -- இத்தாலி, பிரான்ஸ், பிரேசில் ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், இன்று கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் கே.எல்.ஐ.ஏ-விலிருந்து புறப்பட்டார்.
பிரதமர் மற்றும் இதர பேராளர்களை ஏற்றிச் சென்ற சிறப்பு விமானம் இன்று பிற்பகல் மணி 2.15-க்கு கே.எல்.ஐ.ஏ-விலிருந்து புறப்பட்டது.
இத்தாலிக்கு மேற்கொள்ளும் மூன்று நாள்கள் அதிகாரப்பூர்வ பயணத்தில் உலக அளவிலான பொருளாதார ஒத்துழைப்பை ஊக்குவிப்பதோடு, இரு நாடுகளுக்கு இடையிலான நல்லுறவும் வலுப்படுத்தப்படும்.
அதைத் தொடர்ந்து பிரான்ஸ், பிரேசில் ஆகிய நாடுகளுக்கும் பிரதமர் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்ள விருக்கிறார்.
அதில் இறுதியாக, பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்காவை உட்படுத்திய கூட்டமைப்பின் ஓர் உறுப்பிய நாடாக, மலேசியாவைப் பிரதிநிதித்து, BRICS உச்சநிலை மாநாட்டில் டத்தோ ஶ்ரீ அன்வார் கலந்து கொள்வார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)