BREAKING NEWS   Malaysia hopes ASEAN-Canada Free Trade Agreement negotiations can be concluded soonest possible for mutual benefit - PM Anwar | 
Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

மின் கம்பத்தை மோதி வாகன ஓட்டுநர் பலி

03/07/2025 07:09 PM

பாசிர் பூத்தே, 03 ஜூலை (பெர்னாமா) --   இன்று காலை, கிளந்தான், ஜாலான் செராங் ருக்குவிலிருந்து தெலாகா பப்பானை நோக்கிச் செல்லும் இரண்டாவது கிலோமீட்டரில், மீன் கம்பத்தை கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில், அதன் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார். 

காலை சுமார் 7 மணிக்கு நிகழ்ந்த அச்சாலை விபத்தில் 25 வயதுடைய ஆடவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

தெலாகா பப்பானிலிருந்து செராங் ருக்குவை நோக்கி பாதிக்கப்பட்டவர் தனியாக வாகனத்தைச் செலுத்தி வந்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக, கிளந்தான், பாசிர் பூத்தே மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிண்டென்டன் சைசுல் ரிசால் சக்காரியா கூறினார்.

சம்பவ இடத்தை நெருங்கிய போது, கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் இடதுபுற சாலைக்குச் சென்றதுடன், மின் கம்பத்தில் மோதியதாக நம்பப்படுவதாக, இன்று தாம் வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

பாதிக்கப்பட்டவரை வெளியேற்றும் முயற்சிக்கு சிறிது நேரம் தேவைப்பட்டதால், விபத்து நடந்த பகுதியில் மின்சாரம் தடைப்பட்டதை, Tenaga Nasional நிறுவனம், TNB ஊழியர்கள் உறுதிப்படுத்தினர்.

விபத்து குறித்து தகவல் தெரிந்தவர்கள் 016-5072413 என்ற எண்ணில் தொடர்புக் கொண்டு புகாரளிக்கலாம். 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)