ஆக்ரா, 04 ஜூலை (பெர்னாமா) -- இரண்டு நாள்கள் பயணம் மேற்கொண்டு கானா சென்றிருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, நேற்று, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.
இந்தியா-ஆப்பிரிக்கா ஒத்துழைப்பிற்கு முக்கியத்துவம் அளித்த மோடி, உள்ளூர் அதிகாரமளிப்பில் கவனம் செலுத்தும் தேவை சார்ந்த மேம்பாட்டு கூட்டாண்மைகளையும் வலியுறுத்தினார்.
இந்தியாவின் நோக்கம் முதலீடு செய்வது மட்டுமல்ல.
அதிகாரமளிப்பதும், தன்னிறைவு கொண்ட செயல்முறை வளர்ச்சிக்கு உதவுவதும் அடங்கும் என்றும் மோடி கூறினார்.
கடந்த 30 ஆண்டுகளில் கானாவுக்கு இந்தியப் பிரதமர் மேற்கொண்ட முதல் பயணம் இதுவாகும்.
அனைத்துலக தகவல் தொழில்நுட்பம் மற்றும் புதுமை மையமாக செயல்படும் கானாவின் திறனை மோடி பாராட்டினார்.
மேலும், ஆப்பிரிக்க கண்டத்தின் சுதந்திர வர்த்தக பகுதியில் உள்ள பொருளாதார ஒருங்கிணைப்பு நோக்கிய அதன் முயற்சிகளையும் அவர் வரவேற்றார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)