Ad Banner
Ad Banner
Ad Banner
 அரசியல்

முன்னமே கலைக்கப்படாவிட்டால் நவம்பர் 11-இல் சபா சட்டமன்றம் தானாக கலைக்கப்படும்

06/07/2025 04:10 PM

கோத்தா கினபாலு, 06 ஜூலை (பெர்னாமா) - நவம்பர் 11-ஆம் தேதிக்கு முன்னதாகவே சபா மாநிலத்தின் 16ஆவது சட்டமன்றம் கலைக்கப்படாவிட்டால், சம்பந்தப்பட்ட தேதியில் அது தானாக கலைக்கப்படும்.

சபா மாநிலத்தின் 16ஆவது சட்டமன்ற முதல் கூட்டத் தொடர் தொடங்கப்பட்ட 2020ஆம் ஆண்டு நவம்பர் 12ஆம் தேதி தொடங்கி அம்மாநிலத்தின் ஐந்தாண்டு பதவிக்காலம் தொடங்கியதாக சபா சட்டமன்ற தலைவர்  டத்தோ ஶ்ரீ கட்சிம் எம் யஹ்யா தெரிவித்தார்.

அந்த ஐந்தாண்டுப் பதவிக் காலம் இவ்வாண்டு நவம்பர் 11-ஆம் தேதியுடன் நிறைவடைவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

கடந்த 2020ஆம் ஆண்டு செப்டம்பர் 26ஆம் தேதி நடைபெற்ற சபா மாநிலத் தேர்தல் அல்லது அதே ஆண்டில் செப்டம்பர் 22ஆம் தேதி நடைபெற்ற முன்கூட்டியே வாக்களிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், அம்மாநிலத்திற்கான ஐந்தாண்டு பதவிக்காலம் குறித்து அங்குள்ள மக்கள் தவறான புரிதலைக் கொண்டிருப்பதாக  டத்தோ ஶ்ரீ கட்சிம் எம் யஹ்யா கூறினார்.  

"சட்டமன்றம் நிறைவடையும் தேதியையும் வாக்களிக்கும் தேதியையும் மக்கள் எப்போதும் குழப்பிக் கொள்கிறார்கள். சில சமயங்களில், மாதத்தின் ஒரு குறிப்பிட்ட நாளில் வாக்களிக்கும் போது, ​​அங்கிருந்து ஆண்டு கணக்கிடப்படுகிறது என்று மக்கள் கூறுகிறார்கள். சிலர் அது பதவியேற்பு விழாவின் தேதியிலிருந்து என்றும் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில், கூட்டத்தொடரின் முதல் தேதியிலிருந்துதான் அது தொடங்குகிறது," என்றார் அவர்.

ஒருவேளை, நவம்பர் 11ஆம் தேதி மாநில சட்டமன்றம் தானாகவே கலைக்கப்பட்டால், சபா முதலமைச்சர் துன் மூசா அமானுக்கும் தேர்தல் ஆணையத்திற்கும் இது குறித்து தமது தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என்று கட்சிம் கூறினார்.

சட்டமன்றம் கலைக்கப்பட்ட நாளிலிருந்து 60 நாட்களுக்குள் மாநிலத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)