ரியோ டி ஜெனிரோ, 08 ஜூலை (பெர்னாமா) -- இவ்வாண்டு அக்டோபர் மாதம் கோலாலம்பூரில் நடைபெறவிருக்கும் 47-ஆவது ஆசியான் உச்சநிலை மாநாடு மற்றும் அது தொடர்புடைய கூட்டங்கள், வட்டார அமைப்பின் வரலாற்றில் மிகப்பெரியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
26 முதல் 28-ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் அம்மாநாட்டில் ஆசியானுக்கு வெளியே உள்ள பல அரசாங்கத் தலைவர்கள் கலந்துகொள்வது உறுதியாகி உள்ளதாக, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
ரோம்மில், டத்தோ ஶ்ரீ அன்வாரை சந்தித்த இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி மற்றும் பிரேசில் அதிபர் Luiz Inácio Lula da Silva ஆகிய தலைவர்கள் தங்களின் வருகை உறுதிப்படுத்தியுள்ளனர்.
G20 குழுவில் தற்போது தலைவராக பதவி ஏற்றிருக்கும் தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசாவும், ஆசியான் உச்சநிலை மாநாட்டில் கலந்துக் கொள்வதற்கான தமது விருப்பத்தைத் தெரிவித்துள்ளார்.
அதோடு, கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னியும் தமது வருகையை உறுதிப்படுத்தியுள்ளார்.
சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, புருணை, தாய்லாந்து, வியட்நாம், கம்போடியா, லாவோஸ், மியன்மார் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகியவை ஆசியானின் 10 உறுப்பு நாடுகளாகும்.
அதை தவிர்த்து, ஆஸ்திரேலியா, கனடா, சீனா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா, ஜப்பான், நியூசிலாந்து, தென் கொரியா, ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகியவை மாநாட்டில் வழக்கமாக கலந்துக் கொள்ளும் வெளிப்புற பங்காளி நாடுகளாகும்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)