Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

13 வயதுடையவரை சலவை இயந்திரத்தில் புகுத்துவது சாத்தியமற்றது - சாரா தடயவியல் நிபுணர் விளக்கம்

04/09/2025 03:00 PM

கோத்தா கினபாலு, 04 செப்டம்பர் (பெர்னாமா) --   13 வயதுடைய ஒருவரை சலவை இயந்திரத்தின் உள்ளே புகுத்துவது சாத்தியமற்ற செயல் என்று சாரா கைரினா மகாதீரின் உடலைப் பிரேத பரிசோதனை செய்த தடயவியல் நிபுணர், சபா மரண விசாரணை நீதிமன்றத்தில் இன்று தெரிவித்தார்.

1998-ஆம் ஆண்டிலிருந்து, Queen Elizabeth மருத்துவமனையின் தடயவியல் பிரிவில் பணியாற்றி வரும் 58 வயதுடைய டாக்டர் ஜெஸ்ஸி ஹியு, சாராவின் எடைக் காரணமாக அச்செயலை புரிய சாத்தியம் இல்லை என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.

மரணமடைந்த சாராவின் உடல் எடை 53 கிலோகிராம் என்று தெரிவிக்கப்பட்டிருந்த வேளையில், சம்பந்தப்பட்ட அந்த சலவை இயந்திரம் அந்த சுமையுடன் செயல்பட முடியாது என்றும் டாக்டர் ஜெஸ்ஸி விவரித்தார்.

முதலாம் படிவ மாணவி சாரா கைரினாவின் மரணம் குறித்த இரண்டாவது நாள் விசாரணையில், குற்றச்சாட்டுப் பிரிவு இரண்டாம் துணைத் தலைவர் டத்தோ படியுஸ் சமான் அஹ்மாட்டின் விசாரணையின் போது அவர் அத்தகவல்களை வழங்கினார்.

மரண விசாரணை நீதிமன்றத்தின் செஷன்ஸ் நீதிபதி அமிர் ஷா அமிர் ஹசான் முன்னிலையில், இன்று வழக்கு விசாரணை நடைபெற்றது.

கடந்த ஜூலை 17ஆம் தேதி Queen Elizabeth மருத்துவமனையில் 13 வயதுடைய சாரா கைரினா மரணமடைந்தது உறுதிபடுத்தப்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)