பேங்காக், 05 செப்டம்பர் (பெர்னாமா) -- தாய்லாந்தில் பல நாட்களாக நீடித்த அரசியல் குழப்பங்களுக்குப் பிறகு, புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்காக அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க இன்று மக்களவையில் கூடினர்.
தாய்லாந்தின் பூம்ஜைதை கட்சித் தலைவரும் பிரதமர் வேட்பாளருமான அனுடின் சார்ன்விரகுலும் இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்திற்கு வருகை புரிந்தார்.
நெறிமுறை மீறலுக்காக பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ராவை தாய்லாந்தின் அரசியலமைப்பு நீதிமன்றம் ஆகஸ்ட் 30 ஆம் தேதி பதவி நீக்கம் செய்ததைத் தொடர்ந்து இந்த வாக்கெடுப்பு நடைபெறுகிறது.
அந்நாட்டின் அதிகாரத் தரப்புகளுக்கு இடையே பத்து ஆண்டுகளாக நீடித்து வரும் போரில், இராணுவம் அல்லது நீதித்துறையால் நீக்கப்பட்ட கோடீஸ்வரர் ஷினவத்ரா குடும்பத்திலிருந்து அல்லது அவர்களின் ஆதரவினால் பேடோங்டார்ன் ஷினவத்ரா ஆறாவது பிரதமர் ஆனார்.
அவர் தற்போது நீக்கட்டுள்ளதைத் தொடர்ந்து, இன்று நடைபெறும் வாக்கெடுப்பில் அனுடின் சார்ன்விரகுல், பிரதமராக பதவியேற்க மக்களவையில் பாதிக்கும் மேற்பட்டவர்களின் ஆதரவு தேவைப்படுகிறது.
அவரின் கூட்டணியில் 146 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.
மக்கள் கட்சி எதிர்க்கட்சியில் இருக்கத் தேர்வுசெய்தாலும், அக்கட்சி அவருக்கு 143 வாக்குகள் கிடைப்பதை உறுதி செய்வதால், அனுடினுக்குத் தேவையான 247 வாக்குகளை எளிதாகப் பெற வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)