ஜார்ஜ்டவுன், 05 செப்டம்பர் (பெர்னாமா) -- பெங்காலான் வெல்ட் நீரணையில் பினாங்கின் மிதக்கும் ஃபெரி அருங்காட்சியகத்தை அதிகாரப்பூர்வமாக திறப்பதன் வழி பினாங்கு மற்றொரு வரலாற்றைப் பதிவு செய்யவுள்ளது.
உலகின் முதல் பயணிகள் ஃபெரி அருங்காட்சியகம் இதுவாகும்.
மலேசியா தினத்தை முன்னிட்டு செப்டம்பர் 16ஆம் தேதி திறக்கப்படவுள்ள இந்த தனித்துவமான அருங்காட்சியகம், நூறு ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் ‘Pulau Pinang’ என்ற புகழ்பெற்ற ஃபெரி பயணத்திற்கான மறுசீரமைப்பின் விளைவாக உருவாக்கப்பட்டது.
2021ஆம் ஆண்டு பினாங்கு துறைமுக ஆணையம் எஸ்.பி.பி.பி-இன் குத்தகையை வென்ற ஒரு தனியார் நிறுவனத்தால் இந்த அருங்காட்சியகம் திறக்கப்பட்டதாக பினாங்கு ஃபெரி அருங்காட்சியக இயக்குநர் அப்துல் ஹடி அபு ஒஸ்மான் தெரிவித்தார்.
இந்த அருங்காட்சியகம் ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்கி சோதனை கட்டமாக பார்வையாளர்களுக்கு குறிப்பாக, கடந்த மூன்று மாதங்களாக தங்கள் தரப்பு நடத்திய தொடர் சுற்றுப்பயணங்கள் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆரம்ப டிக்கெட் வைத்திருப்பவர்களுக்காக திறக்கப்பட்டதாக அவர் கூறினார்.
ஃபெரியில் உள்ள பல்வேறு கண்காட்சி இடங்கம் மூலம் இந்த அருங்காட்சியகம் ஒரு தனித்துவமான அனுபவத்தை வழங்குகிறது.
பல ஆண்டுகளாக பினாங்கின் போக்குவரத்து, கலாச்சாரம் மற்றும் சமூக நிலப்பரப்பில் ஒரு முக்கிய அங்கமாக இருந்து வரும் அம்மாநிலத்தின் ஃபெரி சேவையின் பாரம்பரியத்தை நினைவுகூர்ந்து பாதுகாக்கும் முயற்சிக்காகவும் இது உருவாக்கப்பட்டது.
இந்த அருங்காட்சியகம் காலை மணி 9 தொடங்கி இரவு மணி 10 வரை திறக்கப்பட்டிருக்கும்.
எனினும், பாதுகாப்பு அம்சம் கருத்தி ஒரு நேரத்தில் 150 பேர் மட்டுமே உள்ளே நுழைய அனுமதிக்கப்படுவர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)