இமாச்சல பிரதேசம், 05 செப்டம்பர் (பெர்னாமா) -- இந்தியாவின் இமாச்சல பிரதேசத்தில் உள்ள குல்லு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் உயிரிழந்தார்.
மேலும், அறுவர் இடிபாடுகளில் சசிக்கியிருக்கலாம் என்று அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து மீட்புக் குழுவினரும் போலீஸ் அதிகாரிகளும் இடிபாடுகளை அகற்றும் நடவடிக்கையை மேற்கொண்ட வேளையில், வானிலை காரணமாக பணியில் சுணக்கம் ஏற்பட்டது.
அதோடு, சம்பவ இடத்திலிருந்து அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர்.
வியாழக்கிழமை இமாலயாவில் தொடர்ந்து பெய்த கனமழையால் வட இந்தியாவிலும் அண்டை நாடான பாகிஸ்தானிலும் முக்கிய ஆறுகளில் நீர் நிரம்பி வழிந்தது.
இதனால், குடியிருப்பு பகுதிகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இந்நிலையில், செப்டம்பர் ஒன்பதாம் தேதி வரை மழை நீடிக்கும் என்று பாகிஸ்தான் எச்சரித்துள்ளது.
இவ்வாண்டு பெய்த கடுமையான பருவமழை பாகிஸ்தானில் பெருமளவில் சேதத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, இதிவரை 880 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் சுமார் 150 பேர் பலியாகினர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)