பாகான் டத்தோ, 07 செப்டம்பர் (பெர்னாமா) - நேற்றிரவு பெர்சத்து இளைஞர் பிரிவின் ஆண்டுக் கூட்டத் தொடக்க விழாவில் ம.இ.கா. இளைஞர் பிரிவு துணைத் தலைவர் கே. கேசவன் கலந்து கொண்டதைத் தொடர்ந்து தேசிய முன்னணிக்கு அக்கட்சி விளக்கம் அளிக்குமாறு ம.இ.காவிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்று தேமு தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.
இவ்விவகாரம் தொடர்பாக எழுத்துப்பூர்வ விளக்கத்தை வழங்குமாறு தேசிய முன்னணியின் பொதுச் செயலாளர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சம்ரி அப்துல் காடிர் Datuk Seri அக்கட்சியிடம் கோரவிருப்பதாக அவர் கூறினார்.
கட்சியின் விதிமுறைகளுக்கு ஏற்ப எந்தவொரு ஒழுங்கு நடவடிக்கையையும் எடுப்பது மஇகாவின் தலைமைத்துவத்தைப் பொறுத்தது என்று அம்னோ தலைவருமான டாக்டர் அஹ்மட் சாஹிட் தெரிவித்தார்.
"இது ஒரு நல்ல செயல் அல்ல. எந்தவொரு பி.என் உறுப்புக் கட்சியும் தனிப்பட்ட முறையிலே அல்லது அதிகாரப்பூர்வமாகவே தனது பிரதிநிதிகளை மடானி அரசாங்கத்திற்கு அப்பாற்பட்டு உள்ள கட்சிகள் ஏற்பாடு செய்யும் கூட்டங்களில் கலந்து கொள்ள அனுப்புவது பொருத்தமானது அல்ல," என்றார் அவர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)