காத்மாண்டு, 09 செப்டம்பர் (பெர்னாமா) - நேபாளத்தில் சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து அந்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டங்களினால் அத்தடை இன்று மீட்டுக்கொள்ளப்பட்டது.
நேற்று தொடங்கிய ஆர்ப்பாட்டங்களில் இதுவரை 19 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அந்நாட்டின் நாடாளுமன்ற கட்டிடத்தின் முன்பு ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் நாடு முழுவதும் பரவத் தொடங்கியது.
ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க போலீஸ் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தினர்.
28 போலீசார் உட்பட காயமடைந்த 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
தவறான பயன்பாட்டைத் தடுக்கும் பொருட்டு, சமூக வலைதளங்கள் பதிவு செய்ய வேண்டும் அந்நாட்டின் அரசாங்கள் கட்டளையிட்டிருந்தது.
அவ்வாறு செய்யத் தவறியதால், கடந்த வாரம் முகநூல் உட்பட பல சமூக ஊடக தளங்களின் பயன்பாட்டை நேப்பாளம் தடை செய்தது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)