Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

பாலஸ்தீனத்திற்கான அசைக்க முடியாத ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியது மலேசியா

13/09/2025 05:33 PM

கோலாலம்பூர், 13 செப்டம்பர் (பெர்னாமா) -- வெள்ளிக்கிழமை, நியூ யார்க் பிரகடனத்தை அங்கீகரிப்பது தொடர்பில், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை தீர்மானத்திற்கு ஆதரவாக இருப்பதன் வழி, மலேசியா பாலஸ்தீனத்திற்கான தமது அசைக்க முடியாத ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

இரு நாடுகளுக்கான தீர்வை உணர்ந்து பாலஸ்தீன அரசாங்கத்தை அங்கீகரிப்பதற்கு, அனைத்துலக சமூகத்தின் பெரும்பான்மையான ஆதரவை பிரதிபலிக்கும் வகையில், இந்தத் தீர்மானம் 142 வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது.

பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் ஆதிக்கம் மற்றும் அட்டூழியங்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒரு முக்கிய படியாக, இரு அரசாங்கத் தீர்வும் பாலஸ்தீன அரசாங்கத்தை அங்கீகரிப்பதும், மலேசியா அத்தீர்மானத்தை ஆதரிக்கும் முடிவில் முக்கிய பங்காக இருந்தது என்று வெளியுறவு அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த வாக்கெடுப்பிற்குப் பின்னர், மலேசியா தமது நிலைப்பாட்டை தெளிவாகக் கூறியது.

அதாவது, இரு நாடுகள் தீர்வை அடைவதும், பாலஸ்தீன அரசாங்கத்தை அங்கீகரிப்பதும் எந்த முன்நிபந்தனைகளுக்கும் உட்பட்டதாக இருக்கக்கூடாது என்றும் பாலஸ்தீன அரசாங்கம் 1967க்கு முந்தைய எல்லைகளை கிழக்கு ஜெருசலேமை அதன் தலைநகராகக் கொண்டு அமைக்க வேண்டும் என்றும் மலேசியா குறிப்பிட்டுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)