பிந்துலு , 15 செப்டம்பர் (பெர்னாமா) - சரவாக், Bintulu, Kidurong-இல் உள்ள Tanjung Batu கடற்கரை அருகே நேற்றிரவு ஒரு காரும் நான்கு சக்கர வாகனமும் மோதிக்கொண்ட விபத்தில் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்த வேளையில் மேலும் நால்வர் சொற்ப காயங்களுக்கு ஆளாகினர்.
சம்பவத்தின் போது, புரோட்டோன் பெர்சோனா ரக வாகனத்தின் ஓட்டுநர் இருக்கையில் நினைவற்ற நிலையில் அவர் சிக்கிக் கொண்டிருந்ததாக சரவாக் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புப் படையின் நடவடிக்கை செயல்பாட்டு மையம் ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்திருந்தது.
39 வயதுடைய அன்சாம் மஜா என்பவரே இவ்விபத்தில் உயிரிழந்ததை சுகாதார அமைச்சின் அதிகாரி ஒருவர், உறுதிபடுத்தினார்.
சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி காரில் சிக்கிக் கொண்ட அவரை தீயணைப்பு வீரர்கள் வெளியேற்றினர்.
அடுத்தக்கட்ட நடவடிக்கைக்காக அவ்வாடவரின் உடல் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்னமே, நான்கு சக்கர வாகனமான Mitsubishi Triton-இல் இருந்த நால்வர் பொதுமக்களால் வெற்றிகரமாக வெளியேற்றப்பட்டனர்.
அவர்களுக்கு தலை மற்றும் காலில் மட்டுமே காயங்கள் ஏற்பட்டிருந்தன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)