டாக்கா, 15 அக்டோபர் (பெர்னாமா) -- வங்களாதேசத் தலைநகர் டாக்காவில் உள்ள ஆடைத் தயாரிக்கும் தொழிற்சாலை மற்றும் ஒரு ரசாயனக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது பதினாறு பேர் உயிரிழந்துள்ளதாக தீயணைப்பு துறை தெரிவித்திருக்கிறது.
நேற்று நிகழ்ந்த இந்த அசம்பாவிதத்தில் பலர் காயமுற்றனர்.
டாக்கா, Mirpur மிர்பூர் பகுதியில் உள்ள ஆடை தயாரிக்கும் ஏழு மாடி கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.
மாலைக்குள் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, உயிரிழந்தவர்களின் சடலங்கள் சில மீட்கப்பட்டன.
இரசாயனக் கிடங்கில் ஏற்பட்ட வெடிப்பினால் நச்சு வாயு பரவியதாகவும் அதனை சுவாசித்த பலர் மாண்டதாகவும் கூறப்படுகிறது.
சீனாவிற்கு அடுத்து, உலகின் இரண்டாவது பெரிய ஆடைத் உற்பத்தி தொழில் துறையை வங்காளதேசம் கொண்டுள்ளது.
இத்துறையில் சுமார் 40 லட்சம் பேர் பணிபுரிகின்றனர்.
அவர்களில் பெரும்பாலும் பெண்கள் ஆவர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)