பிரிக்பீல்ட்ஸ்சில், 16 அக்டோபர் (பெர்னாமா) -- தீபாவளி கொண்டாட்டத்திற்கு இன்னும் சில தினங்களே எஞ்சியுள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகளில் மக்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ்சில் உள்ள லிட்டல் இந்தியாவில், பலகாரங்கள், புத்தாடை, அலங்கரிப்பு பொருள்கள் போன்றவற்றை வாங்குவதில் பரபரப்பாக மக்கள்
இயங்கிக் கொண்டிருக்கின்றனர்.
இந்த தருணத்தில் அவர்களிம் தீபாவளி சிந்தனை குறித்து பெர்னாமா செய்திகள் மேற்கொண்ட கண்ணோட்டத்தை தொடர்ந்து காண்போம்.
தீபாவளி இந்தியர்களின் பாரம்பரியமான பண்டிகை என்பதால், அதனைக் கொண்டாடுவதன் மூலன் மக்கள் தங்களின் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் தொடர்ந்து பாதுகாக்க முடிவதாக பொது மக்களில் சிலர் கூறினர்.
அதன் முக்கியத்துவத்தை இளம் தலைமுறைக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்பதையும் சிலர் வலியுறுத்தினர்.
''தீபாவளி என்பது வெறும் உணவு உணபதுமட்டுமள்ள, அது ஒரு சமையம், பண்பாடு, பாரம்பரியம் ஆகும். காலையில் எழுத்து தலைக்கு எண்ணை தேய்பது, பூஜைகள் செய்வது, அதற்கு முதல் நாள் இறந்த முன்னோர்களுக்கு ஒளி ஏற்றுவது போன்ற செயல்கலை நாம் குழந்தைகழுக்குக் கற்றுத் தர வேண்டும்,'' என்றார் பி. ஆனந்தஷர்மா.
மேலும், ''குழந்தையாய் இருக்கும் போது, அனைத்து தீபாவளி ஏற்பாடுகளும் பெற்ரோர்கள் நமக்கு செய்வர். ஆனால் வளர்ந்து பெரியர் ஆனதும், நான் இந்த தீபாவளி ஏற்பாடுகளைச் செய்து,என் கனவரிடம் ஆசிர்வாதம் பெற்றுக்கொள்வேன்,'' என்றார் துர்காஷினி விஜயன்.
தொடர்ந்து, "பல்கலைக்கழக மாணவர்களாக, தீபாவளி விடுமுறைகள் முடிந்து பல்கலைக்கழகம் திருப்பியதும், மற்ற மாணவர்கள் தாங்கள் வீட்டிலுள்ள பலகாரங்களைக் கொண்டு வந்து, அதனை பகிர்ந்து உண்டு தீபாவளி கதைகளைப் பேசிக்கொண்டு தீபாவளியைக் கொண்டாடுவோம்,'' என்று தெரிவித்தார் துர்காஷினி ரகுநாதன்.
தீபாவளி மக்களிடையே மகிழ்ச்சி, அன்பு மற்றும் நல்லிணக்கத்தை அளிப்பதால் இதனை ஒற்றுமையோடு கொண்டாவது அவசியமாகும்.
--பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)