கிள்ளான், 16 அக்டோபர் (பெர்னாமா) -- பெட்டாலிங் ஜெயாவில் உள்ள இடைநிலைப் பள்ளி ஒன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை 16 வயது மாணவியைக் கத்தியால் குத்தி கொலை செய்த மாணவனுக்குக் கற்றல் குறைபாடு இருந்ததைப் பள்ளி தரப்பினர் முன்னதாக அறிந்துள்ளனர்.
மேலும், சம்பந்தப்பட்ட அந்த 14 வயது மாணவனுக்கு மனநலப் பிரச்சனை இருப்பது பள்ளிக்கு முன்னதாகத் தெரியும் என கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மையல்ல என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஷசெலி கஹார் கூறினார்.
"அந்த மனநிலையைப் பற்றி நான் கருத்து தெரிவிப்பது நியாயமற்றது என்று நினைக்கிறேன். ஏனென்றால், போலீஸ் மனநல மருத்துவர்கள் அல்ல. எனவே, நாம் சரியான நிபுணரை அணுக வேண்டும். உடல் ரீதியாகத் தற்போதைய நிலைமை பரவாயில்லை. அவ்வளவுதான் நான் சொல்ல முடியும்," என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து, "விசாரணையைப் பொறுத்தவரை, அவர் தனது கற்றல் முறைகளை மேம்படுத்த ஒரு மாற்று ஆலோசனை செயல்முறைக்கு உட்பட்டுள்ளதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது. மாறாக அவரது மன ஆரோக்கியம் அல்லது ஆளும அடிப்படையில் அல்ல," என்றும் டத்தோ ஷசெலி கஹார் கூரினார்.
இன்று, கிள்ளான், ஜாலான் தெங்கு கிளானா, லிட்டல் இந்தியாவில் தீபாவளி கடைகளைப் பார்வையிட்ட பின்னர் அவர் செய்தியாளர்களிடம் அதனை கூறினார்.
--பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)