பாரோய் நெகிரி செம்பிலான், 19 அக்டோபர் (பெர்னாமா) -- 2025/2026 மலேசிய FA கிண்ண காற்பந்தாட்டம்.
சனிக்கிழமை நடைபெற்ற முதல் சுற்று காலிறுதி ஆட்டத்தில், ஐந்து முறை வெற்றியாளரான சிலாங்கூர், நெகிரி செம்பிலானை 4-0 என்ற கோல்களில் வீழ்த்தியது.
பாரோய் துவான்கு அப்துல் ரஹ்மான் அரங்கில் நடைபெற்ற இவ்வாட்டத்தின் 34-வது நிமிடத்தில் கேப்டன் ஃபைசால் ஹலிம் வழி சிலாங்கூர் முதல் கோலை அடித்தது.
முதல் பாதி ஆட்டம் 1-0 என்று முடிவடைய, இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கி 46-வது நிமிடத்திலேயே சிலாங்கூர் இரண்டாவது கோலை போட்டது.
56 வது நிமிடத்தில் மூன்றாவது கோலையும் , 63-வது நிமிடத்தில் நான்காவது கோலையும் அடித்து சிலாங்கூர் தனது வெற்றியை உறுதி செய்தது.
இரண்டாம் சுற்று காலிறுதி ஆட்டம், அக்டோபர் 29-ஆம் தேதி பெட்டாலிங் ஜெயா மாநகராண்மை கழக அரங்கில் நடைபெறவுள்ளது.
மற்றொரு முதல் சுற்று காலிறுதி ஆட்டத்தில் திரெங்கானுவும் கூச்சிங் சிட்டியும் மோதின.
இவ்வாட்டத்தில், 4-1 என்ற கோல்கள் எண்ணிக்கையில் கூச்சிங் சிட்டி வெற்றி பெற்றது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)