பசே, அக்டோபர் 20 (பெர்னாமா) -- பிலிப்பைன்சிலும் தீபாவளி கொண்டாட்டம் களைக்கட்டியது.
அந்நாட்டில், பசே நகரில், இந்தியச் சமூகத்தைச் சேர்ந்த நூற்றுக் கணக்கானோர் ஒற்றுமையாகவும் மகிழ்ச்சியாகவும் இந்நாளைக் கொண்டாடினர்.
இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளுடனும், விளக்குகளை ஏற்றியும், நூற்றுக்கணக்கான இந்தியர்கள் குதூகலமாகத் தீபாவளி பண்டிகையை வரவேற்றனர்.
அதோடு, கடை வீதிகளில் தீபாவளி விற்பனை சூடு பிடித்த வேளையில், இனிப்புப் பலகாரங்கள், வானவெடிகளுடன் இந்நாளை அங்குள்ள மக்கள் மகிழ்ச்சியாகக் கொண்டாடினர்.
இந்தியாவிற்கும் பிலிப்பைன்சுக்கும் இடையில் நீண்டகால நட்பு தொடரும் நிலையில், இது 75-வது தீபாவளி கொண்டாட்டம் என்று பங்கேற்பாளர்களில் ஒருவர் தெரிவித்தார்.
கணிசமான புலம்பெயர்ந்த இந்தியர்கள் வசிக்கும் பிலிப்பைன்சில், ஒரு லட்சத்து 50 ஆயிரம் இந்திய வம்சாவளியினர் உள்ளனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)