கோலாலம்பூர், டிசம்பர் 24 (பெர்னாமா) -- ஒவ்வொரு முதலீடும் மக்களுக்கு மற்றும் நாட்டிற்கு இன்றும் எதிர்காலத்திற்கும் அர்த்தமுள்ள வருமானத்தை வழங்குவதை உறுதி செய்வதே மடானி அரசாங்கத்தின் உறுதிப்பாடாகும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.
மடானி அரசாங்கத்தால் கொண்டு வரப்படும் முதலீடுகள், பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுப்பதோடு மட்டுமல்லாமல் மக்களுக்கும் நன்மையளிக்கும் என்று நிதியமைச்சருமான டத்தோ ஶ்ரீ அன்வார் தெரிவித்தார்.
இம்முதலீடுகள் தரமான வேலை வாய்ப்புகளை உருவாக்குவதோடு வருமானம் மற்றும் நல்வாழ்வையும் உயர்த்துகிறது.
மேலும், போட்டித்தன்மை வாய்ந்த மற்றும் உள்ளடக்கிய புதிய பொருளாதார சக்தியை உருவாக்குவதாக நேற்றிரவு தமது முகநூல் பதிவில் பிரதமர் கூறினார்.
2025ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களுக்கான நாட்டின் முதலீட்டு அடைவுநிலையைக் காட்டும் பல தகவல் வரைபடங்களையும் பிரதமர் பகிர்ந்து கொண்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)