சுலாவெசி தீவு, 29 டிசம்பர் (பெர்னாமா) -- இந்தோனேசியா, சுலாவெசி தீவில் உள்ள மனாடோ எனும் நகரில் முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் மாண்டனர்.
இவ்விபத்து நேற்றிரவு ஏற்பட்டதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த முதியோர் இல்லத்தில் வசித்தவவர்கள் பெரும்பாலானோர் வயதானவர்கள் என்பதால் அவர்கள் கட்டிடத்தின் உள்ளே சிக்கிக்கொண்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் மூவர் தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக மனாடோ நகர தீயணைப்பு துறையின் தலைவர் ஜிம்மி ரொட்டின்சுலு கூறினார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]