Ad Banner
Ad Banner
 உலகம்

உக்ரேன் - ரஷ்யா போர் விரைவில் முடிவுக்கு வரலாம்

29/12/2025 04:33 PM

அமெரிக்கா, 29 டிசம்பர் (பெர்னாமா) -- உக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பொருட்டு, போர் நிறுத்த ஒப்பந்தம் மிக விரைவில் எட்டப்படலாம் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.

போர் நிறுத்தம் தொடர்பான அண்மைய நிலவரங்கள் கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என்று அவர் கூறுகிறார்.

''எங்களின் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது. நாங்கள் பல விவகாங்களைப் பற்றி விவாதித்தோம். உங்களுக்குத் தெரியும், அதிபர் புதினுடன் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நான் தொலைபேசியில் உரையாடினேன். அதுவும் சிறப்பாக அமைந்தது. நாங்கள் பல விவகாரங்கள் பற்றி விவாதித்தோம். மேலும் நாங்கள் மிகவும் நெருக்கமாகி (போர் நிறுத்தம்) வருகிறோம், ஒருவேளை மிக நெருக்கமாக இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன்,'' என டோனல்ட் டிரம்ப் கூறினார்.

நேற்று அமெரிக்கா புளோரிடாவில் உக்ரேன் அதிபர் வோலோடிமிர் செலன்ஸ்கியுடனான சந்திப்பிற்குப் பிறகு, டிரம்ப் அவ்வாறு கூறினார்.

20 அம்ச அமைதி திட்டத்தில் 90 விழுக்காடு செலன்ஸ்கி ஒப்புதல் வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

நீண்ட நேரமாக நடைபெற்ற அவ்விரு தலைவர்களின் சந்திப்பில் பல விவகாரங்கள் பற்றி விவாதிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

--பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)