BREAKING NEWS   Warga ATM terlibat aktiviti tidak bermoral, rosakkan imej ATM akan disingkir daripada perkhidmatan - Mohamed Khaled | 
Ad Banner
 பொது

பிரதமருக்கான பதவிக்கால வரம்பு; நாடாளுமன்றத்தில் தாக்கல்

05/01/2026 04:30 PM

புத்ராஜெயா, 05 ஜனவரி (பெர்னாமா) -- பிரதமருக்கான பதவிக்கால வரம்பு குறித்து இவ்வாண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். 

புதிய சட்ட மசோதாவின் மூலம், அக்கால வரையறை 10 ஆண்டுகளுக்கு மேற்போகாமல் அல்லது இரண்டு முழு தவணைகளாக நிர்ணயிக்கப்படும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். 

''அனைவருக்கும் பதவிக்கால வரையறை உள்ளது. அரசாங்கத் தலைமைச் செயலாளர் (கே.எஸ்.என்) பத்து ஆண்டுகள் வரை இருக்க முடியாது. மேலும் இது அனைவருக்கும் பொருந்தும். ஏனெனில், அதற்கு மேல் கால அவகாசம் வழங்கப்பட்டால், அதை செயல்படுத்த முடியும். அதன் பிறகு, அதை அடுத்த தலைமுறையிடம் ஒப்படைப்பது நல்லது. இது பிரதமர் அலுவலகத்திற்கும் பொருந்தும். பின்னர் பிரதமரின் பதவிக் காலத்தை 10 ஆண்டுகள் அல்லது 2 முழு தவணைகளுக்கு மேற்போகாமல் கட்டுப்படுத்தும் சட்டமசோதாவை நாங்கள் முன்வைப்போம்,'' என்றார் அவர்.

அரசு தரப்பு வழக்கறிஞர் மற்று தேசிய சட்டத்துறை தலைவர் ஆகிய இரு தரப்பிற்கும் இடையிலான அதிகாரப் பகிர்வும் இந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் முன்வைக்கப்படும் முதல் சட்டமசோதா என்று டத்தோ ஶ்ரீ அன்வார் அறிவித்தார்.

அதுமட்டுமின்றி, தகவல் சுதந்திர சட்டமசோதா மற்றும் குறைதீர்ப்பு சட்ட மசோதாக்களும் தாக்கல் செய்யப்படும் என்று அவர் கூறினார். 

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]