| BREAKING NEWS | Warga ATM terlibat aktiviti tidak bermoral, rosakkan imej ATM akan disingkir daripada perkhidmatan - Mohamed Khaled | |
புத்ராஜெயா, 06 ஜனவரி (பெர்னாமா) -- இந்த ஆண்டிலிருந்து வேப் எனப்படும் மின்னியல் சிகரெட்டுகளுக்கானப் பயன்பாட்டை முழுமையாகத் தடைசெய்ய, சுகாதார அமைச்சு கட்டம் கட்டமாக நடவடிக்கை எடுக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.
2024-ஆம் ஆண்டு பொது சுகாதாரத்திற்கான புகைப் பிடிக்கும் பொருட்களின் கட்டுப்பாட்டுச் சட்டம் அல்லது சட்டம் 852-இன் அமலாக்கத்தில் எவ்வித சமரசமும் செய்யப்படாது என்ற நிலைப்பாட்டில் அமைச்சு உறுதியாக உள்ளது என்று, சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிஃப்லி அஹ்மாட் தெரிவித்தார்.
நாட்டில் தொற்றா நோய்கள் மற்றும் popcorn lung எனும் நுரையீரல் நோய் அபாயங்களிலிருந்து எதிர்கால தலைமுறைகளை பாதுகாப்பதற்கான பெரிய பொறுப்பை இச்சட்டம் கொண்டிருப்பதை டாக்டர் சுல்கிஃப்லி அஹ்மாட் சுட்டிக்காட்டினார்.
இதற்கான தொடக்கட்ட ஒப்புதல் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம்-இடம் இருந்து பெறப்பட்டுள்ளதாகவும், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் விரைவில் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும் டாக்டர் சுல்கிஃப்லி தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)