Ad Banner
 பொது

உணவுக் குத்தகை தொடர்பிலான 10 குற்றச்சாட்டுகளிலிருந்து ஷேக் ஹசான் விடுவித்து விடுதலை

06/01/2026 06:25 PM

குவாந்தான், ஜனவரி 06 (பெர்னாமா) -- 36 ஆயிரத்து 279 ரிங்கிட் 69 சென் மதிப்புள்ள உணவு விநியோக குத்தகையைத் தனது மனைவிக்குச் சொந்தமான நிறுவனத்திற்கு வழங்கியதாகத் தம்மீது சுமத்தப்பட்டிருந்த பத்து குற்றச்சாட்டுகளில் இருந்து பெறாமு தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் முன்னாள் தலைவர் ஷேக் ஹசான் ஷேக் சைனுட்டின் இன்று விடுவித்து விடுதலை செய்யப்பட்டார்.

தமது மனைவிக்குச் சொந்தமான நிறுவனத்திற்கு 36 ஆயிரத்து 279 ரிங்கிட் 69 சென் மதிப்பிலான உணவு விநியோக குத்தகையை வழங்கியதற்காக ஷேக் ஹசான் மீது சுமத்தப்பட்ட பத்து குற்றச்சாட்டுகள் நிருபிக்கப்பட்டதைத் தொடர்ந்து கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் 16ஆம் தேதி அவருக்கு 180 மாத சிறைத் தண்டனையும் ஒரு லட்சத்து 94 ஆயிரத்து 62 ரிங்கிட் 10 சென் அபராதமும் விதித்து குவாந்தான் செக்‌ஷன் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

முன்னதாகச் செக்‌ஷன் நீதிமன்றம் விதித்திருந்த அபராதம் மற்றும் சிறைத் தண்டனையை ரத்து செய்யக் கோரி அவர் செய்திருந்த மேல்முறையீட்டிற்கு நீதிபதி சாம்ரி மஸ்ரி அனுமதி அளித்திருந்தார்.

--பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)