Ad Banner
 விளையாட்டு

பிரிமியர் லீக்; ஆர்செனல் லிவர்பூல் சமநிலை

09/01/2026 06:53 PM

லண்டன், ஜனவரி 09 (பெர்னாமா) -- இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ணம்...

இன்று அதிகாலை அர்செனலும் லிவர்பூலும் சந்தித்த ஆட்டம் கோல் ஏதுமின்றி
சமநிலையில் முடிந்தது.

இந்த சமநிலை முடிவால், இரு கிளப்களும் தலா ஒரு புள்ளியைப் பெற்றன.

ஏழு ஆட்டங்களில் தொடர்ச்சியாக சொந்த அரங்கில் வெற்றி பெற்றிருந்ததால், ஆர்சனல் இப்போட்டியில் முன்னணி அணியாக களமிறங்கியது.

அதே நேரத்தில், கடும் போட்டியாளராக கருதப்பட்ட மான்செஸ்டர் சிட்டி மற்றும் ஆஸ்டன் வில்லா அணிகள், புள்ளிகளை இழந்திருந்தன.

ஆனால், ஆர்சனலின் தாக்குதல் ஆட்டக்காரர்கள் வரிசையில் காணப்பட்ட மந்த நிலையும், லிவர்பூல் அணியின் கோல் காவலரின் பலமும் இரு அணிகளை சமநிலை முடிவை எதிர்கொள்ள வைத்திருக்கின்றது.

இந்த முடிவின் வழி, பட்டியலில் ஆர்சனல் 49 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

இரண்டாம் மூன்றாம் இடங்களில் உள்ள மான்செஸ்டர் சிட்டி மற்றும் ஆஸ்டன் வில்லா தலா 43 புள்ளிகளைக் கொண்டிருக்கும் வேளையில், 35 புள்ளிகளுடன் லிவர்பூல் நான்காம் இடத்தில் உள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)