Ad Banner
 பொது

நவீன முறையில் பன்றி வளர்ப்பு தொழில்துறை; சிலாங்கூர் சுல்தானுக்கு விளக்கம் அளிக்கப்படும்

11/01/2026 03:35 PM

ஷா ஆலம் , 11 ஜனவரி (பெர்னாமா) -- ஹுலு சிலாங்கூர், புக்கிட் தாகார்-இல், பன்றி வளர்ப்பு தொழில்துறையை நவீன மையமாக்குவதன் விவகாரம் குறித்து விளக்கம் அளிக்க, சிலாங்கூர் சுல்தான் சுல்தான் ஷாராஃபுட்டின் இட்ரிஸ் ஷா உடன், மாநில உள்கட்டமைப்பு மற்றும் விவசாயத்திற்கான ஆட்சிக்குழு உறுப்பினர்  டத்தோ இஸாம் ஹஷிம், நாளை சந்திப்பு நடத்த திட்டமிட்டுள்ளார்.

எவ்வித சமரசமுமின்றி தொழில்துறை சூழலின் பாதுகாப்பு மற்றும் தூய்மையை வலுப்படுத்தும் அமலாக்க நிறுவனங்களின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உட்பட மாநில அரசாங்கத்தின் கூட்ட மன்றம், எம்.எம்.கே.என்-இன் முடிவுகளைச் சமர்பிக்க, அவர்களின் அச்சந்திப்பு மாநில அரசாங்கத்திற்கு வாய்ப்பளிக்கும் என்று சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோ செரி அமிருடின் ஷாரி கூறினார்.

வடிகால் அமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்தாத வகையில், கழிவுகளை நிர்வகிப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் நிலையில், சிலாங்கூரில் பன்றி வளர்ப்பு தொழில்துறைக்கான செயல்முறையைக் கடுமையாக்க முன்னதாக, எம்.எம்.கே.என் முடிவு செய்திருந்ததாக, இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் டத்தோ செரி அமிருடின் குறிப்பிட்டிருந்தார்.

பல ஆண்டுகளாக நீடித்து வரும் பிரச்சனைக்குத் தீர்வுக் காணும் நோக்கில், அனைத்து அம்சங்களிலும் குறிப்பாக தொழில்நுட்ப நிறுவனங்களின் கருத்துகளைக் கருத்தில் கொண்டு, அம்முடிவு எடுக்கப்பட்டதாக, அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

மக்களின் ஆரோக்கியம், சுற்றுச்சூழல் மற்றும் வடிகால் அமைப்பின் பாதுகாப்பிற்கும், துர்நாற்றத்தைத் தடுப்பதற்கும் இம்முடிவு முக்கியமானது என்று டத்தோ செரி அமிருடின் கூறினார்.

மேலும், இதன்மூலம் பாதுக்காப்பான முறையில் தொழில்துறை செயல்படும் அதேவேளையில் சமூகத்தின் உணர்திறனையும் பராமரிக்க முடியும் என்று, அவர் குறிப்பிட்டிருந்தார்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)