BREAKING NEWS   Warga ATM terlibat aktiviti tidak bermoral, rosakkan imej ATM akan disingkir daripada perkhidmatan - Mohamed Khaled | 
Ad Banner
 உலகம்

மியன்மாரில் இரண்டாம் கட்ட பொதுத்தேர்தல்

11/01/2026 04:24 PM

மியன்மார், ஜனவரி 11 (பெர்னாமா) -- மியன்மாரில் இன்று இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்றது.

முதற்கட்ட தேர்தலில் குறைவான வாக்குகளே பதிவு செய்யப்பட்டதால் இன்றைய தேர்தலில் இலக்கிடப்பட்ட வாக்குப்பதிவுகள் பதிவு செய்யப்படும் என்று தேர்தல் அதிகாரிகள் கணித்திருக்கின்றனர்.

போரினால் பாதிக்கப்பட்ட மியன்மார் வாக்காளர்கள் காலை தொடங்கியே வாக்குகளைப் பதிவு செய்ய வரிசையில் காத்திருந்தனர்.

கடந்த டிசம்பர் 28ஆம் தேதி நடைபெற்ற முதற்கட்ட தேர்தலில் இராணுவ ஆதரவு பெற்ற இரு அரசியல் கட்சிகள் முன்னிலை வைக்கிக்கின்றன.

போட்டியிடப்பட்ட 102 தொகுதிகளில் 90 இடங்களை அவ்விரு கட்சிகளும் வென்றதன் மூலம் இராணுவத்தின் அதிகாரமே புதிய அரசாங்கத்தில் நீடிக்கும் என்று அந்நாட்டின் அரசியல் ஆய்வாளர்கள் விமர்சித்திருக்கின்றனர்.

2020 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத் தேர்தலை முதற்கட்ட தேர்தலில் 52.13 விழுக்காடு வாக்குப்பதிவு மட்டுமே பதிவு செய்யப்பட்டது.

மியன்மார் தேர்தலுக்கான நிறைவு கட்ட வாக்குப்பதிவு வரும் ஜனவர் 25ஆம் தேதி நடைபெறவுள்ளது.

2021ஆம் ஆண்டு ஆங்சான் சூச்சியின் அரசாங்கத்தைக் கவிழ்த்து இராணுவம் ஆட்சியை கைப்பற்றியது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)