கோலாலம்பூர், ஜனவரி 12 (பெர்னாமா) -- சமூக ஊடகங்களில் பரலாக பகிரப்பட்ட யெயெ எனும் கலாச்சாரத்துடன் தொடர்புடைய அநாகரீக செயல்களில் ஈடுபட்ட அரச மலேசிய விமானப்படை அதிகாரிகள் மீதான விசாரணை நிறைவு பெற்று விரைவில் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது.
சம்பந்தப்பட்ட அந்த அனைத்து அதிகாரிகளும் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் போது தங்களைத் தற்காத்துக் கொள்ள அவர்களுக்கு உரிமை உண்டு என்று தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமாட் காலிட் நோர்டின் தெரிவித்தார்.
''அவர்கள் விசாரிக்கப்படுகிறார்கள். விசாரணை நிறைவுற்றதும், சட்ட செயல்முறை தொடரும். நிச்சயமாக அவர்களுக்கு தங்களைத் தற்காத்துக் கொள்ள உரிமை உண்டு.'' என்றார் டத்தோ ஶ்ரீ முஹமாட் காலிட் நோர்டின்
இன்று பாதுகாப்பு அமைச்சரின் 2026 புத்தாண்டு வாழ்த்து செய்தி வழங்கியப் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் டத்தோ ஶ்ரீ முஹமாட் காலிட் அவ்வாறு கூறினார்.
மது அருந்துவதற்கும் குடும்பத்தினர் அல்லாத விருந்தினர்களை உணவகத்திற்குள் அழைத்து வருவதற்கும் விதிக்கப்படும் தடை நீண்ட காலமாகவே மலேசிய இராணுவப்படையின் சட்ட விதிமுறைகளில் இடம்பெற்றுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
''சமூக ஊடகங்களில், இது இராணுவத்தின் ஒரு சாதாரணமான கலாச்சாரமாகச் சித்தரிக்கப்படுகிறது. உண்மையில் விதிகள் தெளிவாக உள்ளன. நிகழ்ந்து விதிகளை மீறிய தனிநபர்களின் செயல்கள்தான்.'' என்றார் டத்தோ ஶ்ரீ முஹமாட் காலிட் நோர்டின்
அவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் பணி நீக்கம் உள்ளிட்ட அதிகபட்ச தண்டனை விதிக்கப்படலாம் என்றும் முஹமாட் காலிட் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)