இந்தியா, 13 ஜனவரி (பெர்னாமா) -- 2 நாள் பயணமாக ஜெர்மன் அதிபர் ஃப்ரிடிரிச் மெர்ஸ் இந்தியாவிற்கு சென்றிருக்கும் நிலையில், ஜெர்மனிக்கும் இந்தியாவிற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
முக்கிய கனிமங்கள், சுகாதாரத் துறை மற்றும் செயற்கை நுண்ணறிவு புத்தாக்க மையம் ஆகியவற்றை உள்ளடக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்அவ்விரு நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன.
ஃப்ரிடிரிச்-கின் வருகையைத் தொடர்ந்து, இந்தியா-ஜெர்மனிக்கு இடையே தொழில்நுட்ப ஒத்துழைப்பு அதிகரித்துள்ளதாகவும்; ஜெர்மனியுடனான உறவை மேலும் வலுப்படுத்த உறுதி கொண்டுள்ளதாகவும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
"இந்திய மற்றும் ஜெர்மன் நிறுவனங்களின் பசுமை ஹைட்ரோஜன் மீதான மிகப்பெரியத் திட்டம் எரிசக்தித் துறையின் எதிர்காலத்திற்கு ஒரு திருப்புமுனையாக இருக்கும். பாதுகாப்பான, நம்பகமான மற்றும் நிலையான விநியோகத்தில் ஜெர்மனியும் இந்தியாவும் இணைந்து செயல்படுகின்றன. இந்த அனைத்துப் பிரச்சினைகளிலும் இன்று கையெழுத்திடப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் எங்களின் ஒத்துழைப்புக்கு புதிய உத்வேகத்தையும் பலத்தையும் அளிக்கும்," என நரேந்திர மோடி கூறினார்.
ஜெர்மன் அதிபர் ஃப்ரிடிரிச் மெர்ஸ்-சின் நேற்று, திங்கட்கிழமை இந்தியாவிற்கான பயணத்தின்பொது நரேந்திர மோடி அவ்வாறு தெரிவித்தார்.
மேலும், இந்தியர்களுக்கு விசா இல்லாத பயண வசதியை ஜெர்மனி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, நரேந்திர மோடியுடனான சந்திப்பைத் தொடர்ந்து, இம்மாத இறுதிக்குள் ஐரோப்பிய ஒன்றியமும் இந்தியாவும் ஒரு சுயேட்சை வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யலாம் என்று Friedrich பரிந்துரைத்துள்ளார்.
ஜனவரி மாத இறுதிக்குள் அந்த ஒப்பந்தம் எட்டப்பட்டால், அதில் கையெழுத்திட மீண்டும் அக்காலக்கட்டத்தில் தாம் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ள வாய்ப்பு இருபதாக அவர் குறிப்பிட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)