புத்ராஜெயா, 13 ஜனவரி (பெர்னாமா) -- அவதூறு வழக்கு ஒன்றில், கூட்டரசு பிரதேச பிரதமர் துறை அமைச்சர் ஹான்னா யோ-விற்கு 250,000 ரிங்கிட் இழப்பீட்டு தொகை வழங்க தேசிய போலீஸ் படை முன்னாள் தலைவர் தான் ஶ்ரீ மூசா ஹஸான்-னுக்கு இன்று உத்தரவிடப்பட்டுள்ளது.
கூட்டரசு நீதிமன்ற நீதிபதி டத்தோ அஸிமா ஒமார் தலைமையிலான மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் மூவர் அடங்கிய நீதிபதி குழுவும், Hannah-விற்கு 60,000 ரிங்கிட் செலவுத் தொகையை வழங்க மூசா-விற்கு உத்தரவிட்டது
ஹான்னா தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்யும் போது நீதித்துறை ஆணையர் தனது முடிவில் தவறு செய்ததாகக் கண்டறியப்பட்டது.
எனவே, மேல்முறையீட்டு நீதிமன்றம் அவரின் மேல்முறையீட்டை அனுமதித்து அந்தத் தீர்ப்பை ரத்து செய்ய உத்தரவிட்டதாக மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான டத்தோ டாக்டர் சோ கா சிங் மற்றும் டத்தோ டாக்டர் ஷானாஸ் சுலைமான் ஆகியோருடன் இவ்வழக்கை செவிமடுத்த நீதிபதி டத்தோ அஸிமா கூறினார்.
தான் ஶ்ரீ மூசா-விற்கு எதிரான தமது வழக்கை தள்ளுபடி செய்து, அவருக்கு செலவுத் தொகையான 40,000 ரிங்கிட்டை செலுத்த, 2024ஆம் ஆண்டு, டிசம்பர் 23ஆம் தேதி, தமக்கு உத்தரவிட்ட கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்துHannah மேல்முறையீடு செய்திருந்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)