Ad Banner
 பொது

குழந்தை காப்பகத்தில் 3 மாத ஆண் குழந்தைக்குப் பலத்த காயம்; போலீஸ் விசாரணை

14/01/2026 05:23 PM

கோலாலம்பூர், ஜனவரி 14 (பெர்னாமா) -- செந்தூல், தாமான் கொபெராசி போலீஸ்-சில் உள்ள குழந்தை காப்பகம் ஒன்றில் பராமரிப்பாளரின் அலட்சியத்தால் மூன்று மாத ஆண் குழந்தைக்குப் பலத்த காயம் ஏற்பட்ட சம்பவம் குறித்துப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் மணி 2.38-க்கு இச்சம்பவம் தொடர்பாக தமது தரப்பிற்குப் புகார் கிடைத்ததாகவும் குழந்தை காப்பகத்திற்கு அனுப்பப்பட்ட பின்னரே அந்த ஆண் குழந்தையின் இடது தொடையில் வீக்கம் ஏற்பட்டிருப்பது இப்புகாரின் மூலம் தெரியவந்துள்ளதாகவும் கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சஸ் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட குழந்தை அழுகையை நிறுத்த முடியாமல் தவித்ததால் அவரது பெற்றோர் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாக டத்தோ ஃபாடில் மார்சஸ் கூறினார்.

அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர் குழந்தையின் இடது தொடை எலும்பு முறிந்திருப்பதைக் கண்டறிந்து போலீசில் புகார் அளித்தார்.

இதனிடையே, இச்சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் 2001-ஆம் ஆண்டு சிறார்கள் சட்டம் செக்‌ஷன் 31(1)(a)-இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் ஃபாடில் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)