புத்ராஜெயா, ஜனவரி 14 (பெர்னாமா) -- தடுப்புக் காவல் மரண சம்பவங்களுக்கு எதிராக அமலாக்க நிறுவனங்களுக்கான ஒருங்கமைவு ஆணையம் EAIC ஆய்வுக்குழு பரிந்துரையைச் செயல்படுத்துவது மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுக்கான பரிந்துரை தொடர்புடைய அமைச்சரவையின் புரிந்துணர்வு திட்ட வரைவு கடந்தாண்டு டிசம்பர் மாதம் பிரதமர் துறையிடம் சமர்பிக்கப்பட்டது.
EAIC ஆய்வுக்குழு அறிக்கையில் உள்ள பரிந்துரைகள் மீது மேற்கொள்ளப்பட்ட தொடர் நடவடிக்கைகள் மற்றும் ஆழமான ஆராய்ச்சியைத் தொடர்ந்து ஆய்வுக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கான சிறப்புப் பணிக்குழு இந்த வரைவைச் சமர்ப்பித்தது.
இந்த அறிக்கை முன்னதாக 2024ஆம் ஆண்டு மே 7ஆம் தேதி நடைபெற்ற தேசிய நிர்வாக அமைச்சரவைச் சிறப்புக் குழு JKKTN கூட்டத்தில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் தாக்கல் செய்யப்பட்டப் பின்னர் சம்பந்தப்பட்ட சிறப்புப் பணிக்குழுவை நிறுவ முடிவு செய்யப்பட்டது.
இந்த வரைவின் உள்ளடக்கம் பல அம்சங்களை உட்படுத்தியுள்ளதாக EAIC இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அவற்றில் EAIC உட்பட 13 அமைச்சுகள், துறைகள் மற்றும் நிறுவனங்களைப் பிரதிநிதிக்கும் சிறப்பு பணிக்குழுவின் 19 உறுப்பினர்கள் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளுக்கு விரிவான மதிப்பாய்வைச் சமர்ப்பித்துள்ளதோடு கொள்கையளவில் ஒப்புதலையும் தெரிவித்துள்ளனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)