Ad Banner
 விளையாட்டு

12 ஆண்டுகளுக்குப் பிறகு மலேசியா வந்தது உலகக் கிண்ணம்

22/01/2026 08:14 PM

ஷா ஆலாம், ஜனவரி 22 (பெர்னாமா) -- காற்பந்துப் விளையாட்டில் மிகவும் பிரசித்திப் பெற்ற கிண்ணமான உலகக் கிண்ணம் நேற்று மலேசியாவுக்குக் கொண்டு வரப்பட்டது. 

2026 உலகக் கிண்ண காற்பந்துப் போட்டியை முன்னிட்டு தங்க நிறத்திலான இந்த உலகக் கிண்ணம் சுமார் 75 நாடுகளில் காட்சிக்கு வைக்கப்படுகிறது. 

ஷா ஆலாமில் உள்ள Skypark அனைத்துலக விமான நிலையத்தில் நேற்று அக்கிண்ணம் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள வேளையில் 2002 உலகக் கிண்ணம் வென்ற பிரேசிலிய ஜாம்பவான் கில்பர்டோ சில்வாவும் அதில் கலந்து கொண்டுள்ளார். 

குளிர்பான நிறுவனத்தின் ஆசியான் மற்றும் தெற்கு பசிபிக் செயல்பாட்டு பிரிவின் தலைவர் சல்மான் கரீகவும் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சின் பொதுச் செயலாளர் டத்தோ டாக்டர் கே.நகுலேந்திரனும் உலகக் கிண்ணத்தைக் காட்சிப்படுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

மலேசிய கால்பந்து ரசிகர்களுக்குக் காட்சிப்படுத்தும் நோக்கில் அக்கிண்ணம் நேற்று பிற்பகலில் Sunway Pyramid பேரங்காடியில் பார்வைக்கு வைக்கப்பட்டது.

மலேசியாவின் காற்பந்து ஜாம்பவான் டத்தோ சந்தோக்ஹ் சிங்க் மற்றும் எம்.கே என்று அழைக்கப்படும் நாட்டின் பிரபல பாடகர் முஹமட் ஹைரி ஹம்தன் ஆகியோரும் அங்கு வருகை புரிந்திருந்தனர்.

மலேசியாவை அடுத்து இந்த பிஃபா உலகக் கிண்ணம் தென்

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)