Ad Banner
 பொது

சரவாக்: தம்பதியர் இறந்து கிடந்த சம்பவத்தின் விசாரணை நிறைவு

23/01/2026 02:00 PM

கூச்சிங், 23 ஜனவரி (பெர்னாமா) --  சரவாக், கூச்சிங், ஶ்ரீ அமானில் உள்ள வீடொன்றில் தம்பதியர் இறந்து கிடந்த சம்பவம் தொடர்பிலான விசாரணை நிறைவுப் பெற்றுள்ளது.

இதுவரை, குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், சக ஊழியர்கள் மற்றும் அண்டை வீட்டார் உட்பட 30 சாட்சிகளிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, அவ்விருவரின் பிரேதப் பரிசோதனைகளில் இருந்தும் இரசாயன மற்றும் நோயியல் அறிக்கைகள் பெறப்பட்டுள்ளதாக சரவாக் போலீஸ் ஆணையர் டத்தோ முஹமட் சைனால் அப்துல்லா தெரிவித்தார்.

''இவ்வழக்கு விசாரணை நிறைவடைந்தது என்று நான் அறிவிக்கிறேன். இவ்வழக்கில் ஆயுதம் பயன்படுத்தப்பட்டது எங்கள் விசாரணையில் தெரியவந்தது. எனினும், அதில் பாதிக்கப்பட்ட இருவரின் மரபணு (டி.என்.ஏ) மட்டுமே உள்ளது. வெளிநபர் மரபணு எதுவும் கண்டறியப்படவில்லை. கொள்ளைச் சம்பவத்திற்கான அறிகுறிகளோ தடயங்களோ இல்லை. அல்லது காணாமல் போகவோ, விலை மதிப்புடைய பொருள்கள் களவாடப்படவோ இல்லை. எனவே, இச்சம்பவம் உயிரிழந்த இருவரை மட்டுமே உள்ளடக்கியது என்பதுதான் நாங்கள் செய்யக்கூடிய அனுமானம்'', என்றார் அவர்.

இன்று, சரவாக் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற மாதாந்திர கூட்டத்தில் கலந்து கொண்டப் பின்னர் டத்தோ முஹமட் சைனால் செய்தியாளர்களிடம் பேசினார்.

இவ்வழக்கில் மேல் விசாரணை தேவையில்லை என்றாலும், உயிரிழந்த அவ்விருவரின் கைத்தொலைபேசிகளின் தடயவியல் அறிக்கைக்காக தமது தரப்பு காத்திருப்பதால், இதனை என்.எஃப்.ஏ எனப்படும் மேல் நடவடிக்கையற்ற வழக்கு என்று வகைப்படுத்த முடியாதென அவர் விவரித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)